
தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தனது வீட்டிலிருந்த சிவாஜிலிங்கத்திற்கு, திடிரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக அவசர அம்புலன்ஸ் வண்டியில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இதனையடுத்து அவர் வைத்தியசாலையின் அவசர சிகிச்சைபிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.