
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவை பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ள அனுமதிக்குமாறு கோரி, எதிர்க்கட்சியினர் இன்று சபையில் ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டுள்ளனர்.
ரஞ்சன் ராமநாயக்க பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்வது தொடர்பாக, தெளிவான அறிவுறுத்தல்களை சபாநாயகர் வெளியிட வேண்டுமென எதிரணியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எதிரணியினர் ஆர்ப்பாட்டத்தை ஆரம்பிக்கும் போது, பிரதி சபாநாயகர் சபையில் இருந்துள்ளதோடு, ஆர்ப்பாட்டத்துக்கு இடையே சபாநாயகர் வருகை தந்துள்ளார்.
ரஞ்சன் ராமநாயக்கவை பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ள அனுமதிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தொடர்ந்தும் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், அதற்கு சபாநாயகர் முறையாகப் பதிலளிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம், அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாகவும், அவரை வெலிக்கடை சிறைச்சாலைக்கு இடம் மாற்றுமாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.