
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா பி.டெப்லிட்ஸ் வவுனியாவுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
இதேநேரம் வவுனியாவில் பூந்தோட்டம் மகாவித்தியாலயத்தில் மேம்படுத்தப்பட்ட நேர்நிகர் வகுப்பறை ஒன்றை ஆரம்பித்து வைத்துள்ளார்.
நேர்நிகர் வகுப்பறைகள் ஊடாக பல்வகை மாணவச் சமூகங்களுக்கிடையிலான பரஸ்பர உறவை வலுப்படுத்துவதனை நோக்கமாகக்கொண்டு இந்த வகுப்பறை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அத்தோடு சர்வதேச அபிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவர் அமைப்பின் 21ஆயிரம் அமெரிக்க டொலர் மதிப்பில் வவுனியா பூந்தோட்டம் மகாவித்தியாலம் மற்றும் திருகோணமலையில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் இந்த வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளது.
அதனை உத்தியோகப் பூர்வமாக இன்றையதினம் அமெரிக்க தூதுவர் ஆரம்பித்து வைத்துள்ளார்.
இந்த நிகழ்வில் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இளங்கோவன், பாடசாலையின் அதிபர் திருமதி நந்தபாலன் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பலரும் கலந்துகொண்டனர்.