
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மகிந்த ராஜபக்ஷ ஆகியோர் கொவிட் தடுப்பூசிகளை போட்டுக்கொண்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் போதே, அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கொவிட் தடுப்பூசியை ஜனாதிபதியும், பிரதமரும் போட்டுக்கொண்டுள்ளார்களா? என்றும், இல்லை என்றால் எப்போது அவர்கள் அதனை போட்டுக்கொள்வார்கள் என்றும் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதற்குப் பதிலளித்த அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல, ‘அவர்கள் இருவரும் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டுள்ளனர்’ எனத் தெரிவித்துள்ளார்.