
2024 ஆம் ஆண்டில் ஐக்கிய தேசியக் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் அமைக்கப்படும் என்று அந்தக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
ஆட்சியை கைப்பற்றுவது தொடர்பாக தற்போது பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடல்களை நடத்தி வருவதாகவும் வஜிர அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.
பலப்பிட்டிய மற்றும் அம்பலாங்கொட ஐக்கிய தேசியக் கட்சி செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்தை அமைக்கப்பதற்காக முன்னெடுக்கப்படும் திட்டங்களை முழுமையாக வெளியிட முடியாது எனவும் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இதேவேளை தற்போதைய அரசாங்கத்திற்குள் அதிருப்தியில் இருக்கும் அமைச்சர்கள் சிலர் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான எதிர்பார்ப்பில் இருப்பதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் குறிப்பிட்டுள்ளார்.