(File Photo)
இலங்கை, மன்னார் வளைகுடா கடற்பகுதியில் பாதுகாப்பை அதிகரிக்கும் பொருட்டு இந்திய கடற்படையின் இரண்டு அதிவேக ரோந்து படகுகள் பாம்பன் குந்துகால் மீன்பிடி துறைமுகத்திற்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மன்னார் வளைகுடா கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா, கடல் அட்டை ,மஞ்சள், தங்கம் போன்றவை அதிகளவில் கடத்தப்படுவதால் இந்த பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய இரண்டு ரோந்து படகுகள் சென்னையில் இருந்து குந்துகால் மீன்பிடி துறைமுகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளளமை குறிப்பிடத்தக்கது.