June 16, 2025 15:08:40

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து சமிந்த வாஸ் விலகினார்

மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள சமிந்த வாஸ் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் மார்ச் 26 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் அவர் பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து விலகவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

இதனால் எதிர்வரும் மேற்கிந்திய தீவுகளுக்கான சுற்றுப்பயணத்தில் அவர் கலந்துகொள்ளமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று இரவு இலங்கை அணி மேற்கிந்திய தீவுகள் நோக்கி பயணமாகவுள்ள நிலையிலேயே சமிந்த வாஸ் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளார்.

தனது சம்பள கொடுப்பனவுகள் தொடர்பான பிரச்சனைகளை அடிப்படையாக கொண்டே அவர் பதவி விலக தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.