இலங்கையில் ரயில் சாரதிகள் நள்ளிரவு முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
மஹவ – ஓமந்தை இடையிலான இரட்டை ரயில் பாதைகளை அமைக்கும் வேலைத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் மோசடிகளை அடிப்படையாக கொண்டே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை ரயில் எஞ்சின் சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட தெரிவித்துள்ளார்.
அந்த வேலைத்திட்டத்தில் இடம்பெற்றுள்ள மோசடிகள் தொடர்பாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கையெடுக்க வேண்டுமென்று அந்த சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தமாக இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், இதனால் நள்ளிரவு முதல் ரயில் சேவைகள் ஸ்தம்பிதமடையும் என்றும் ரயில் எஞ்சின் சாரதிகள் சங்கத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார்.