May 23, 2025 5:23:21

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

குறிகட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கி படகில் பயணித்த மீனவர்கள் இருவர் மாயம்; படகு மீட்கப்பட்டது

குறிகட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கி படகில் பயணித்த மீனவர்கள் இருவர் காணாமற்போயுள்ளனர் என்று நெடுந்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காணாமல் போன மீனவர்களை தேடி முன்னெடுக்கப்பட்ட பணியில் படகு மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறிகட்டுவானிலிருந்து ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.45 மணிக்கு நெடுந்தீவுக்கு திரும்பிய மீனவர்கள் இருவரே இவ்வாறு காணாமற்போயுள்ளனர்.

நெடுந்தீவு 6ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த மரியநாயகம் அமலன் மேயன் (வயது-20), நெடுந்தீவு 10ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த றொபின்சன் (வயது-40) ஆகிய இருவருமே காணாமற்போயுள்ளனர்.

அவர்களை தேடும் பணியை கடற்படையினர் முன்னெடுத்த போது படகு நெடுந்தீவு கரையில் மீட்கப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.