January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பழ. நெடுமாறன் நலம் பெற வேண்டி நல்லூரில் சிறப்பு வழிபாடு!

கொவிட் – 19 தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் தமிழர் தேசிய முன்னணித் தலைவர் பழ. நெடுமாறன் நலம் பெற வேண்டி நல்லூரில் சிறப்பு வழிபாடு இடம்பெற்றது.

சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன் தலைமையில் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் இவ் சிறப்பு வழிபாடு இடம்பெற்றுள்ளது.

இதில், வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சரும், ஈழத் தமிழர் சுயாட்சி கழகத்தின் செயலாளருமான அனந்தி சசிதரன் கலந்து கொண்டுள்ளார்.

மூத்த தலைவர் பழ. நெடுமாறன், சில தினங்களுக்கு முன்னர் கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு ராஜீவ்காந்தி அரசு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

83 வயதான இவர் ஈழத்தமிழர் போராட்டத்தில் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக தன்னை அர்ப்பணித்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.