
ஐநா மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத் தொடர் நாளை ஆரம்பமாகவுள்ளது.
உலகளாவிய கொரோனா தொற்றுப் பரவல் நிலைமையால் இம்முறை இந்தக் கூட்டத்தொடரில் வீடியோ தொழிநுட்பம் ஊடாகவே நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.
இதில் இலங்கை சார்பாக வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன கலந்துகொள்ளவுள்ளார்.
இந்தக் கூட்டத் தொடரின் போது, ஐநா மனித உரிமைகள் ஆணையாளரினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையை அடிப்படையாக கொண்டு ஐக்கிய இராச்சியம், கனடா,ஜேர்மன் உள்ளிட்ட 6 நாடுகள் கூட்டாக இலங்கை தொடர்பான பிரேரணை ஒன்றை கொண்டுவரவுள்ளன.
நல்லிணக்கம், பொறுப்புக் கூறல், மனித உரிமைகள் ஆகிய விடயங்களை உள்ளடக்கியதாகவே அந்தப் பிரேரணையை முன்வைப்பதற்கு குறித்த 6 நாடுகளும் தயாராகியுள்ளன.
எவ்வாறாயினும் அதற்கு இலங்கை அரசாங்கம் தமது எதிர்ப்பை வெளியிடவுள்ளது.
அந்தப் பிரேரணைகளையும், மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக கொண்டு வரப்படும் தீர்மானங்களையும் எதிர்கொள்வதற்கு தேவையான தயார்ப்படுத்தல்களை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது என்று வெளிவிவகார அமைச்சர் தினேஸ்குணவர்தன தெரிவித்துள்ளார்.