May 3, 2025 18:33:17

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஹர்த்தால்: வவுனியாவில் கடைகளை திறக்குமாறு பொலிஸார் அறிவித்தல்!

ஒன்றிணைந்த தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில் வடக்கு , கிழக்கில் இன்று முன்னெடுக்கப்படும் ஹர்த்தால் போராட்டத்திற்கு வவுனியா வர்த்தகர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய அவர்கள் தமது வர்த்தக நிலையங்களை பூட்டி ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் வவுனியா பொலிஸார், வர்த்தக நிலையங்களுக்கு சென்று வர்த்தக நிலையங்களை திறக்குமாறு வலியுறுத்தி வருகின்றனர்.

அத்துடன் ஒலிபெருக்கி ஊடாக கடைகளை திறக்குமாறும் பொலிஸார் அறிவித்தல் விடுத்துள்ளனர்.

ஆனபோதும் வவுனியாவில் ஒரு சில வர்த்தக நிலையங்களை தவிர மற்றைய அனைத்தும் மூடப்பட்டுள்ளன.