
வெளிமாவட்டங்களில் இருந்து வந்து செல்லும் பஸ்கள் யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியால் நகருக்குள் நுழைவதற்கு முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாநகர சபை அறிவித்துள்ளது.
பொது போக்குவரத்துகள் பிரதான வீதி ஊடாக புதிதாக அமைக்கப்பட்ட நெடுந்தூர பஸ் தரிப்பிடத்திற்கு செல்ல வேண்டும் எனவும் மாநகர சபை கோரிக்கை விடுத்துள்ளது.
யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியை பயன்படுத்துவதை தவிர்ப்பதன் மூலம் யாழ் நகரின் போக்குவரத்து நெரிசல் பெருமளவில் குறைவடையும் என்பதால் இந்த விடயத்தில் அனைவரினதும் ஒத்துழைப்பை மாநகர சபை கேட்டுக்கொண்டுள்ளது.
யாழ்.புதிய பஸ் தரிப்பிடத்தை இலங்கை போக்குவரத்து சபையும் தனியார் பஸ் உரிமையாளர்களும் பயன்படுத்த மறுத்து வந்த நிலையில் யாழ் மாநகர சபை இத்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.
இவ் அறிவிப்பை மீறி செயற்படுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு யாழ்ப்பாணம் போக்குவரத்து பொலிஸாருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் மாநகர சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.