அமெரிக்கா, இலங்கை உட்பட பல நாடுகள் பாரதிய ஜனதா கட்சியின் கொள்கைகளினால் கவரப்பட்டு அதனை ஏற்றுக்கொள்வது குறித்து சிந்திக்கின்றன என திரிபுரா மாநில சட்ட அமைச்சர் ரட்டன் லால் நாத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் வெற்றிபெற்ற பின்னர், பாஜக இலங்கை மற்றும் நேபாளத்திலும் ஆட்சியமைக்கும் திட்டத்தில் உள்ளது என திரிபுரா மாநில முதலமைச்சர் தெரிவித்ததாக சமீபத்தில் வெளியாள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இதனை தெளிவுபடுத்தும் வகையில் திரிபுரா மாநில சட்ட அமைச்சர் ரட்டன் லால் நாத், வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
உலகநாடுகள் பாஜகவின் கொள்கையால் கவரப்படும் என்பதையே முதலமைச்சர் கூறியிருந்தார். ஆனால் அதன் அர்த்தம் பாஜக அரசாங்கத்தை அமைக்கும் என்பதில்லை முதலமைச்சரின் கருத்து தவறாக அர்த்தப்படுத்தப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் முழு உலகமும் பாஜகவின் கொள்கைகளையும் சிந்தனைகளையும் ஏற்றுக்கொள்ளும் என தாம் கருதுவதாகவும் அவை, நரேந்திர மோடியின் யோசனைகள் குறித்தும் சிந்திப்பதாகவும் சட்ட அமைச்சர் தெரிவித்துள்ளார்.