ஐநா மனித உரிமைகள் பேரவையின் சபையின் 46 ஆவது கூட்டத் தொடரில் முஸ்லிம் நாடுகளின் ஆதரவு இம்முறையும் இலங்கைக்குக் கிடைக்கும் என்று வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இலங்கை முஸ்லிம்களின் ஜனாஸா நல்லடக்க விவகாரம் இதில் தாக்கம் செலுத்தாது என்றும், முஸ்லிம் நாடுகளின் பிரதிநிதிகளுக்கு அதுதொடர்பாக தெளிவுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கப்படும் என பிரதமர் மகிந்த ராஜபக்ஷ வெளியிட்ட கருத்து உண்மையானதே எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுகாதார நிபுணர் குழுவின் பரிந்துரையையே பிரதமர் தெரியப்படுத்தினார் எனவும், இது தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் எனவும் வெளிவிவகார அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.