அரச தலைவர் கிராம மக்களின் குறைகளைத் தேடிப் பார்க்கும் போது, எதிர்த் தரப்பினருக்கான வாய்ப்புகள் இல்லாமல் போகும் என்று அவர்கள் பயப்படுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பின்தங்கிய கிராமங்களுக்கான கண்காணிப்பு விஜயத்தின் 11 ஆவது நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
புத்தளம் கருங்காலிக்குளம் கிராமத்தில் இன்று ஜனாதிபதியின் கிராம விஜயம் நடைபெற்று வருகின்றது.
எதிர்த் தரப்பினரின் பயத்தை அதிகப்படுத்துவதற்காக மேலும் பல்வேறு கிராமங்களுக்கும் விஜயம் செய்யவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கிராமங்களுக்குச் சென்று மேற்கொள்ளும் உரைகள் தவறாக சித்தரிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களின் காணிப் பிரச்சினைகளுக்கான தீர்வை ஆராயும் போது, தான் கிராமங்களுக்குச் சென்று காடழிப்பில் ஈடுபடுவதாக போலிப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.