
இலங்கையின் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று கிளிநொச்சியில் தீச்சட்டி பேரணியொன்றை ஆரம்பித்துள்ளனர்.
இந்தப் பேரணி கிளிநொச்சி பிள்ளையார் ஆலய முன்றலில் ஆரம்பமாகி, ஏ9 வீதி வழியாக கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் நோக்கி புறப்பட்டுள்ளது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டுமென்பதை வலியுறுத்தியே, இந்தப் பேரணி முன்னெடுக்கப்படுகின்றது.
பேரணியில் வடக்கு, கிழக்கு பகுதிகளில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், பொது மக்கள், சிவில் சமூக பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.