இலங்கையில் நிர்ணயம் செய்யப்பட்ட விலைகளுக்கு தேங்காய் விற்கப்படுகின்றதா என்று நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகள் சந்தைகளுக்கு சென்று ஆராய்ந்து வருகின்றனர்.
தேங்காய் விலை அதிகரிப்பை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த வாரத்தில் அதற்கு அதிகபட்ச சில்லறை விலைகளை நிர்ணயம் செய்து விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.
இந்த அறிவித்தலுக்கமைய 13 அங்குலத்திற்கு அதிகமான சுற்றளவு உள்ள தேங்காய் 70 ரூபாய்க்கும், 12 – 13 அங்குலம் வரையான தேங்காய் 65 ரூபாய்க்கும், 12 அங்குலத்திற்கு குறைவான தேங்காய் 60 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த விலைகளுக்கு தேங்காய் விற்கப்படுகின்றதா? என்று தேங்காயின் சுற்றளவை அளக்கும் கம்பி வளையங்களுடன் அதிகாரிகள் சந்தைகளில் ஆராய்ந்து வருகின்றனர்.