
File Photo
இலங்கையில் கொரேனா தொற்றுப் பரவல் ஏப்ரல் மாதமளவில் மிக மோசமான நிலையை அடையலாம் என்று என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனால் நாட்டு மக்களுக்கு தடுப்பூசிகளை செலுத்தும் நடவடிக்கைகளை அரசாங்கம் துரிதப்படுத்த வேண்டுமென்று அந்த சங்கத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஹரித அழுத்கே தெரிவித்துள்ளார்.
உலகளாவிய ரீதியில் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை கடந்த நாட்களாக குறைவடைந்துள்ள போதும் தொற்றால் மரணிப்பவர்களின் எண்ணிக்கை குறைவடையவில்லை.
அதேபோன்று இலங்கையில் கொழும்பு நகர பகுதியில் தொற்று நிலைமை குறைவடைந்திருந்தாலும், வெளிமாவட்டங்களில் தற்போது வைரஸ் வேகமாக பரவி வருவதாக அவர் கூறியுள்ளார்.
இதேவேளை தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களை சிகிச்சை நிலையங்களுக்கு அழைத்துச் செல்வதில் தாமதங்கள் ஏற்படுவதாகவும், இது ஆபத்தானது என்றும் வைத்தியர் ஹரித அழுத்கே சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே இலங்கையில் பாரிய பாதிப்புக்கள் எவையும் ஏற்படாது என்று கவனயீனமாக இருந்தால் தற்போதுள்ளதை விடவும் மோசமான நிலைமை ஏற்படக் கூடுமெனவும், இதனால் சுகாதார அதிகாரிகள் இந்த நிலைமை ஏற்படுவதை கட்டுப்படுத்துவதற்காக துரிதமான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.