May 27, 2025 16:56:33

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ்.மாநகர முதல்வர் சுவிஸ் தூதுவர் சந்திப்பு!

இலங்கைக்கான சுவிஸர்லாந்தின் புதிய தூதுவர் டொமினிக் ஃபேர்கலர் இன்று யாழ்.மாநகர முதல்வர்  வி.மணிவண்ணனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்த சந்திப்பு இன்று பிற்பகல் யாழ் பொதுசன நூலகத்தில் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்திற்கான தனது முதலாவது விஜயத்தினை மேற்கொண்டுள்ள புதிய தூதுவர் டொமினிக் மற்றும் அவரது குழுவினர் பல தரப்பினரையும் தொடர்ச்சியாக  சந்தித்துவரும் நிலையில், அவர் இன்றையதினம் யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்திற்கு சென்று பார்வையிட்டதோடு மாநகர முதல்வரையும் சந்தித்து பலதரப்பட்ட விடயங்களையும் கலந்துரையாடியுள்ளார்.
குறித்த சந்திப்பில் யாழ் மாநகர சபையின் ஆணையாளர் உள்ளிட்ட சில அரச உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டிருந்தனர்.