மேல் மாகாணத்தின் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தால் இணைக்கப்பட்ட சில மருத்துவர்களுக்கு பல மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் வைத்தியர் செனல் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இதேநேரம் குறித்த மருத்துவர்களுக்கு சுமார் ஒன்பது மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் சம்பந்தமாக நாங்கள் ஆளுநரிடமும் தலைமைச் செயலாளரிடம் எடுத்துக்கூறிய வேளையில், மாகாணத்தில் உள்ள மருத்துவ அதிகாரிகளின் எண்ணிக்கை ஒதுக்கீட்டை விட அதிகரித்துள்ளதால் மேலதிக மருத்துவர்களுக்கு பணம் செலுத்த முடியாது என்று தெரிவித்துவிட்டார்கள் என்றும் டாக்டர் செனல் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மாகாண சபை இந்த பிரச்சனையை தீர்க்காவிட்டால் எதிர்காலத்தில் மருத்துவர்களை நியமிப்பதற்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஒத்துழைப்பு வழங்காது என்றும் வைத்தியர் செனல் பெர்னாண்டோ மேலும் தெரிவித்துள்ளார்.