January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நாளாந்த கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை 500 ஆக குறைவடைந்தது: இலங்கையின் இன்றைய நிலவரம்

இலங்கையில் இன்றைய தினத்தில் 501 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 78,420 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த வாரங்களாக 750 முதல் 950 பேர் வரையிலான தொற்றாளர்கள் நாளாந்தம் அடையாளம் காணப்பட்ட நிலையில் இன்றைய தினம் அந்த எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளது.

647 பேர் குணமடைந்தனர்

கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்தவர்களில் 647 பேர் இன்றைய தினத்தில் குணமடைந்துள்ளதாக கொவிட் தடுப்புக்கான செயலணி தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து இதுவரை 71,823 பேர் குணமடைந்துள்ளதுடன், 6176 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.