February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பொத்துவில் முதல் பொலிகண்டி வரை பேரணியில் கலந்துகொண்ட ஒருவர் கைது

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் பங்கேற்ற குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பருத்தித்துறையைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டு பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் பங்கேற்ற குற்றச்சாட்டில் வடக்கு – கிழக்கில் கைது செய்யப்பட்ட முதலாவது நபர் இவராவார்.

பருத்தித்துறையில் பேரணி இடம்பெற்ற வேளை இளைஞன் பயணித்த மோட்டார் சைக்கிள் இலக்கத்தை வைத்து அவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த பெப்ரவரி 3 ஆம் திகதி முதல் 7 ஆம் திகதி வரையில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையில் கவனயீர்ப்புப் போராட்டங்கள் பல்வேறு தடைகளை மீறியும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.