July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“அடிப்படைவாதிகளின் விருப்பத்திற்கு ஏற்ப நாம் வாழ முடியாது” – அலி சப்ரி

நாட்டில் 95 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தையே விரும்புகின்றனர். 5 வீதமானவர்களே அடிப்படை வாத்தை விரும்புகின்றார்கள். அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப நாம் வாழ முடியாது என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

கொழும்பில், நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டில் இனங்களுக்கு இடேயே வேறுபாடுகள் இருந்தபோதிலும், மனித நேயம் மற்றும் இலங்கையர் என்ற ரீதியில் நாம் அனைவரும் ஒற்றுமையானவர்கள் என அவர் கூறியுள்ளார்.

மக்கள் பன்முகத்தன்மையிலிருந்து விலகி ஒற்றுமையாகச் செயற்படுவதன் மூலம் ​​கலாச்சார ரீதியாக இலங்கையராக ஒன்றிணைய முடியும் என தெரிவித்துள்ள அவர் இது இலங்கை முஸ்லிம்களின் துணை கலாச்சாரத்தைக் குறிக்கும் என்றார்.

அவ்வாறு செயற்படும் போது இனங்களுக்கு இடையே முரண்பாடு ஏற்படாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒருவருக்கொருவர் நம்பிக்கை மற்றும் பரஸ்பர புரிதலை ஏற்படுத்திக்கொள்வதன் மூலம் நாட்டில் எதிர்பார்க்கும் அமைதி, ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தை உருவாக்க முடியும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய கீதத்தின் வரிகளை நினைவுபடுத்திய அவர் காலையில் தேசிய கீதத்தை இசைப்பது மட்டும் போதாது, அந்த வழியில் வாழவேண்டும் என்பதை மனதில் கொள்ளக் கொள்ளவேண்டியது இலங்கையர் ஒவ்வொருவரினதும் மிகப் பெரிய பொறுப்பு என நீதி அமைச்சர் அலி சப்ரி கூறியுள்ளார்.