January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பௌத்த பிக்கு ஒருவர் காடுகளை அழிப்பதாக கமல் குணரத்ன குற்றச்சாட்டு

(filePhoto)

அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதாகக் கூறும் திருகோணமலை பிரதேசத்தைச் சேர்ந்த பௌத்த பிக்கு ஒருவர் காடுகளை அழித்து வருவதாகப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன குற்றம்சாட்டியுள்ளார்.

இதேநேரம் இந்த நடவடிக்கையை உடனடியாக நிறுத்துமாறு கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று அரச அதிபர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது பல்வேறு தரப்பினர் அரசாங்கத்துடன் தொடர்புள்ளவர்கள் எனக் காட்டிக்கொண்டு தவறான வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர் எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் இவ்வாறான நடவடிக்கைகளுக்கு நாம் ஒருபோதும் இடமளிக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு சுற்றுச்சூழல் மற்றும் காடு அழிப்புகள் அதிகளவில் இடம்பெற்று வருகின்றன. பாதுகாப்பு தரப்பினர் இதனைத் தடுக்க முயற்சித்தாலும் அரச அதிகாரிகள் சிலர் இதில் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் கமல் குணரத்ன குற்றம்சாட்டியுள்ளார்.