June 12, 2025 8:29:03

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சிலாபம் முன்னேஸ்வரம் ஆலயத்தின் வருடாந்த கொடியேற்ற நிகழ்வு

சிலாபம் முன்னேஸ்வரம் ஸ்ரீ வடிவாம்பிகா சமேத ஸ்ரீ முன்னை நாதஸ்சுவாமி ஆலயத்தின் வருடாந்த மாசி மாத பிரமோற்சவம் இன்று கொடியேற்றதுடன் ஆரம்பமானது.

ஆலய பிரதம குருவும் தர்ம கர்த்தாவுமான பிரம்மஸ்ரீ எஸ்.பந்தமநாபக் குருக்கள் தலைமையில் கொடி சீலைக்கு விஷேட பூஜை நடைபெற்றது.

இதன்பின்னர் கொடிக் கம்பத்திற்கு அபிஷேகம் நடைபெற்றதுடன் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் மட்டுப்படுத்தப்பட்ட மக்கள் சுகாதார வழி முறையைப் பின்பற்றி கலந்துகொண்டனர்.

இதேநேரம் ஆலய உற்சவங்கள் தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறவுள்ளதுடன் எதிர்வரும் 27 ஆம் திகதி தீர்த்த உற்சவத்துடன் திருவிழா நிறைவுபெறும்.