
திருகோணமலையில் உள்ள எண்ணெய்க்குதங்களின் செயல்பாடு மற்றும் அபிவிருத்திகள் ஆகியவற்றுக்காக ஒத்துழைப்பினை மேலும் மேம்படுத்துவதற்காக ஆலோசனைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
திருகோணமலையில் உள்ள எண்ணெய்க்குதங்களின் கூட்டு அபிவிருத்தி தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் பேச்சாளர் இவ்வாறு பதிலளித்தார்.
இதன்போது இந்தியாவும் இலங்கையும் தமது ஒத்துழைப்பின் முன்னுரிமைக்குரிய விடயங்களில் ஒன்றாக சக்தித் துறை சார் பங்குடைமையை அடையாளம் கண்டுள்ளன.
ஆகவே அதனை உறுதிப்படுத்துவதற்கு இலங்கையுடன் இணைந்து செயல்படுவதில் இந்தியா உறுதியாகவுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் இலங்கையுடனான உற்பத்தித்திறன் மிக்க ஈடுபாட்டினை நாம் தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை திருகோணமலையிலுள்ள எண்ணெய்க் குதங்களை இலங்கையிடம் மீளக் கையளிப்பதற்கு இந்தியா இணக்கம் வெளியிட்டுள்ளதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.