January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதி நிலைநாட்டும் பொறுப்பை இறைவனின் நீதிமன்றத்துக்கு வழங்குவோம்’

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதி நிலைநாட்டும் பொறுப்பை இறைவனின் நீதிமன்றத்துக்கு வழங்குவோம் என்று கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

நேற்று கொழும்பு புனித அன்தோனியர் தேவாலயத்தில் இடம்பெற்ற வழிபாட்டு நிகழ்வொன்றின் போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணைகளில் திருப்தியடையக் கூடிய நிலைமை இல்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் அதிகமான கேள்விகள் விட்டுவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஈஸ்டர் படுகொலைகள் திட்டமிடப்பட்ட ஒன்று என்பதை தாம் அறிந்து வைத்துள்ளதாகவும், அது உள்நாட்டு அல்லது வெளிநாட்டு குழுக்களாக இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

269 சகோதரர கிறிஸ்தவர்களின் உயிர்களைப் பறிந்த, இந்த சுயநல தாக்குதலுக்கு பொறுப்பானவர்களை அடையாளம் கண்டு, சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் பேராயர் கேட்டுக்கொண்டுள்ளார்.