
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக பயங்கரவாத தடுப்பு சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவிற்கு, ஆதரவு வழங்கினார் என்ற குற்றத்துக்காக மத்ரஸா பாடசாலையின் அதிபர் மொஹமட் ஷகீல் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த தகவலை சட்ட மா அதிபர் திணைக்களத்தின் இணைப்பு அதிகாரி சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன உறுதிப்படுத்தியுள்ளார்.