ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை பொருத்தமான நீதவான் நீதிமன்றமொன்றில் ஆஜர்படுத்துமாறு சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா, பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்துள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டம், சிவில் மற்றும் அரசியல் உரிமை தொடர்பான சர்வதேச உடன்படிக்கைக்கு கீழான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு சட்டமா அதிபர் கேட்டுக்கொண்டுள்ளார்.
சதித்திட்டம் தீட்டியமை மற்றும் இனங்களுக்கிடையில் முறுகலை ஏற்படுத்தும் வகையிலான நடவடிக்கையில் ஈடுபட்டமை உள்ளிட்ட ஐந்து குற்றச்சாட்டுகளின் கீழ் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை சந்தேகநபராக பெயர் குறிப்பிடுமாறும் சட்டமா அதிபர் பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணை நடவடிக்கையின் போது, 2020 ஏப்ரல் மாதத்தில் கைதான ஹிஜாஸ் ஹிஸ்புல்லா பயங்கரவாத தடுப்பு சட்டத்தின்கீழ் கடந்த 10 மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.