July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”திருகோணமலையிலுள்ள எண்ணெய்க் குதங்களை இலங்கையிடம் கையளிக்க இந்தியா இணங்கியுள்ளது”

திருகோணமலையிலுள்ள எண்ணெய்க் குதங்களை இலங்கையிடம் மீளக் கையளிப்பதற்கு இந்தியா இணக்கம் வெளியிட்டுள்ளதாக பெற்றோலிய வளத்துறை அமைச்சரும் அரசாங்கத்தின் பேச்சாளருமான அமைச்சர் உதய கம்மன்பில் தெரிவித்துள்ளார்.

எண்ணெய்க் குதங்களை மீளப் பெற்றுக்கொள்வது தொடர்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்திய உயிரிஸ்தானிகருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நிறைவு பெற்றதாக கொலன்னாவையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பேச்சுவார்த்தையின் போது, 2017 ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களையும் புறந்தள்ளி, தாம் முன்வைத்த நிபந்தனைகளை ஏற்றுக் கொள்வதற்கு இந்திய உயரிஸ்தானிகர் இணக்கம் வெளியிட்டிருந்ததாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இதன்படி மிக விரைவில் எண்ணெய்க் குதங்கள் இலங்கை வசமாகும் எனவும், அவற்றை பெற்றுக்கொண்டதும், லங்கா ஐஓசி நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் அவற்றை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கைகளை ஆரம்பிப்போம் என்றும் அமைச்சர் கம்மன்பில அந்த நிகழ்வில் குறிப்பிட்டுள்ளார்.