(FilePHoto)
திருகோணமலை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற ஏழு மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘சாகரா குமார – 4’ என்ற இழுவைப் படகில் நெடுநாள் மீன்பிடிக்கு கடந்த மாதம் ஜனவரி மாதம் 26ஆம் திகதி கடலுக்குச் சென்ற மீனவர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது.
காணாமல் போன இந்த 7 மீனவர்களும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்கள் எனவும் இவர்கள் மாரவில மற்றும் பருதெல்பொல பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.
இதனையடுத்து, திருகோணமலை கடற்படையினர் காணாமல் போன மீனவர்களை தேடும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
எனினும் மியன்மார் கடற்பரப்பில் அந்நாட்டு பாதுகாப்பு பிரிவினரால் குறித்த படகு கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.