January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சிறுவர் துஷ்பிரயோகங்கள் அதிகரிப்பு; அவதானமாக இருக்குமாறு பெற்றோருக்கு அறிவுறுத்தல்

இலங்கையில் சிறுவர்கள் மீதான துஷ்பிரயோகங்கள் அதிகரித்துச் செல்கின்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.

16 வயதுக்குக் குறைந்த பெண் பிள்ளைகள் மீதான துஷ்பிரயோக சம்பவங்கள் அதிகமாகப் பதிவாகின்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விடயத்தில் பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

குறிப்பாக பெண் பிள்ளைகள் பாடசாலை, மேலதிக வகுப்பு மற்றும் வெளிக் களச் செயற்பாடுகளுக்காகச் செல்லும் போது, பெற்றோர் அதிக அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.