அரசாங்கத்தின் ‘பழிவாங்கல்’ நடவடிக்கைகளிலிருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்களை பாதுகாப்பது தனது கடமையென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த நியமிக்கப்பட்டுள்ள ஆணைக்குழுவின் செயற்பாடுகள் குறித்து ஆராயும் விதமாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் எதிர்க்கட்சி தலைவருக்கும் இடையில் அண்மையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக இலக்கு வைத்து முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும் என்பதை அரசாங்கத்திடம் வலியுறுத்தி வருவதாக எதிர்க்கட்சித்தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு முன்னாள் பிரதமர் என்ற வகையில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராகவும் நடவடிக்கைகள் எடுக்கப்படுமாயின் அதற்கு எதிராகவும் எதிர்க்கட்சி தலைவர் என்ற வகையில் தான் குரல் கொடுப்பதற்கு தயாராகவுள்ளேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஜனாதிபதி ஆணைக்குழுவினால் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக முன்னெடுக்கும் பழிவாங்கல் நடவடிக்கைகளில் இருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளை தாம் முன்னெடுப்பதாகவும் எடுப்பதாக எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் வாக்குறுதியளித்துள்ளார்.