November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘வெளியுறவுக் கொள்கையில் தெளிவில்லாத அரசாங்கம் இலங்கையை சீனாவின் காலனித்துவ நாடாக மாற்றிவிட்டது’

இந்தியாவின் ஆதிக்கத்தை குறைப்பதாகக் கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்தவர்கள், இலங்கையை சீனாவின் காலனித்துவ நாடாக மாற்றிவிட்டதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

காலஞ்சென்ற விஜய குமாரதுங்கவின் 33 ஆவது நினைவு தின நிகழ்வில் கலந்துகொண்டதைத் தொடர்ந்து, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் தற்போதைய ஆட்சியாளர்களுக்கு நாட்டின் வெளியுறவுக் கொள்கை குறித்து எந்தவித தெளிவும் இல்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

கற்ற, ஒழுக்கமுள்ள, அரசியலை வியாபாரமாக மாற்றாத, மக்களையும் நாட்டையும் நேசிக்கும், தமது முயற்சியில் நாட்டினை கட்டியெழுப்பும் புதிய அரசியல் தலைமுறைக்கு நாட்டைக் கொடுக்க வேண்டிய காலகட்டம் வந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமது ஆட்சிக் காலத்தில் சர்வதேச நாடுகளுடன் நல்லதொரு நட்புறவை பேணி வந்ததாகவும், எந்தவொரு நாட்டிற்கும் தாம் அடிபடியவில்லை என்றும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.