January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பொதுப் போக்குவரத்தில் இலத்திரனியல் பரிவர்த்தனை அட்டையை அறிமுகப்படுத்த அமைச்சரவை அனுமதி!

இலங்கையில் பஸ் மற்றும் ரயில்களில் ஆகிய பொதுப் போக்குவரத்துச் சேவைகளில்  இலத்திரனியல் முற்கொடுப்பனவு பரிவர்த்தனை அட்டையை (Transit Card)  நடைAll Postsமுறைப்படுத்துவதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளது.

தற்போது பொதுப் போக்குவரத்து துறையில் நடைமுறையிலுள்ள கட்டண அறவீட்டு முறையினால் ஏற்படும் சிரமங்களைத் தவிர்க்கும் நோக்கில் இத் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இத் திட்டத்திற்கான போக்குவரத்து அமைச்சுடன் தொடர்புடைய அனைத்து நிறுவனங்களின் பிரதிநிதிகள் அடங்கிய செயற்பாட்டுக் குழு 2018 ஒக்ரோபர் மாதம் நியமிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இலங்கையில் பொது போக்குவரத்து துறையில் முற்கொடுப்பனவு பரிவர்த்தனை அட்டையை பயன்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க போக்குவரத்து அமைச்சர் சமர்ப்பித்துள்ள திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.