
இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன பதில் சுகாதார அமைச்சராக இன்று ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றுள்ளார்.
சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி கொரோனா தொற்றுக்கு உள்ளாகி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையிலேயே, பேராசிரியர் சன்ன பதில் சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மருந்து உற்பத்தி, விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சராக சன்ன ஜயசுமன செயற்பட்டு வந்தார்.
இதேநேரம், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்ற இராஜாங்க அமைச்சராக ரொஷான் ரனசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.