ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ இன்றுவரை எந்தவொரு கட்சியின் உறுப்பினராகவும் இல்லாத நிலைமை அவரை அரசியல் ரீதியில் பலவீனப்படுத்தும் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
எனவே தான் ஆளும் கட்சியின் பிரதான பதவியில் அவர் இருக்க வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையை தமது தரப்பு முன்வைத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை அதிகாரத்தில் மாத்திரம் இன்றி அரசியல் ரீதியிலும் பலப்படுத்த வேண்டிய தேவை உள்ளது என்றார்.
இத்தனை ஆண்டுகால ஆட்சியில் எந்தவொரு கட்சியையும் சாராத, மற்றும் பொறுப்புரிமை இல்லாத ஒரே ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவேயாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கு முன்னர் இருந்த சகல ஜனாதிபதிகளும் ஆட்சியிலிருந்த கட்சியின் பிரதான பொறுப்பிலிருந்துள்ளனர். எனவே இதை ஒரு குறைபாடாகவே நாம் கருதுகின்றோம் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.