கொரோனா தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்கான இலங்கை அரச மருந்தகக் கூட்டுத்தாபனம் மற்றும் சீரம் நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையிலான ஒப்பந்தத்திற்கு திருத்தங்களின் கீழ் சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரே, அனுமதி வழங்கியுள்ளார்.
சட்டமா அதிபரின் இணைப்பதிகாரி, அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன இதனை தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் சீரம் நிறுவனம் உற்பத்தி செய்யும் இங்கிலாந்தின் “ஒக்ஸ்போர்ட் – அஸ்ட்ராஜெனெகா” தடுப்பூசி கொள்வனவு செய்வதற்கான அனுமதியை பெற்றுக்கொளவதற்கு தேவையான ஆவணங்கள் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
இவ் ஒப்பந்தம் தொடர்பில் சட்டமா அதிபர் தப்புலடி லிவேர, சுகாதார பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தனவிடம் மேலும் விளக்கம் கோரியிருந்தார்.
இந்நிலையிலேயே திருத்தங்களின் கீழ் சட்ட மா அதிபர் குறித்த ஒப்பந்தத்திற்கு அனுமதி வழங்கியுள்ளார்.