November 25, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஐநா மனித உரிமைகள் ஆணையருக்கு எதிரான போராட்டம்; வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் ஹவ்லொக் வீதியை மறித்து போராட்டம் நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு அமைச்சர் விமல் வீரவன்ச உள்ளிட்ட 07 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் ஜூன் மாதம் 21ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே கொழும்பு பிரதான நீதவான் புத்திக ஸ்ரீ ராகல இவ் உத்தரவை பிறப்பித்துள்ளார்.

2016ஆம் ஆண்டு பெப்ரவரி 06ஆம் திகதி சர்வதேச மனித உரிமைகள் தொடர்பான முன்னாள் உயர் ஸ்தானிகர் செய்யித் ராத் அல் ஹுசேனின் இலங்கை விஜயத்தின் போது  அவரின் வருகைக்கு  எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.