இலங்கையில் உள்ள பாடசாலைகளில் நடத்தப்படும் அனைத்து வகையான வைபவங்களையும் மறு அறிவித்தல் வரும் வரை இடைநிறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சின் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், பாடசாலைகளில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள வைபவங்களையும் நிகழ்வுகளையும் உடன் நிறுத்துமாறு கல்வி அமைச்சின் செயலாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அனைத்து வலய, கோட்ட கல்வி அதிகாரிகளும், பாடசாலை அதிபர்களும் இவ்விடயத்தில் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நாட்டில் கொரோனா பரவல் அபாயம் தீவிரமடைந்து வருகின்ற காரணத்தினாலேயே, இவ்வாறான தீர்மானமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சில பாடசாலைகளில் வைபவங்களும் நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாகவும், மாணவர்கள் மற்றும் பாடசாலைச் சமூகத்தின் நலன் கருதி, அவற்றை இடைநிறுத்துமாறும் கல்வி அமைச்சின் செயலாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.