
நாளை முதல் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் “ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா செனகா” தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 16, 17, 18 மற்றும் 19 ஆகிய திகதிகளில் கொழும்பில் உள்ள இராணுவ மருத்துவமனையில் காலை 8.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரை தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இலங்கையில் பொதுமக்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையை இன்று முதல் ஆரம்பித்துள்ளதாக கொவிட் தடுப்பு செயலணியின் தலைவர், இராணுவத் தளபதி ஷவேந்திர டி சில்வா தெரிவித்துள்ளார்.
இதன் ஆரம்பக் கட்டமாக, மேல் மாகாணத்தில் மக்களுடன் நெருக்கமாக பழகும், தொற்று ஏற்படக் கூடிய அச்சுறுத்தல் அதிகமாக உள்ள நபர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுவருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.