இந்தியா, சிங்கப்பூர், சீனா உட்பட நட்பு நாடுகளுடன் இலங்கை மேற்கொண்டுள்ள சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் மீளாய்வுக்கு உட்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை ஏனைய நாடுகளுடன் மேற்கொண்டுள்ள சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை மீளாய்வுக்கு உட்படுத்துவதற்கான அமைச்சரவை அனுமதி கோரப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இதன்போது, ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தங்களைத் தொடர்வதா, புதிய ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுவதா போன்ற விடயங்கள் ஆராயப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்கம் இந்தியாவுடன் செய்துகொள்ள இருந்த பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கை (எட்கா), இந்தியாவுடன் 2000 ஆம் ஆண்டில் இருந்து தொடரும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம், சிங்கப்பூர் மற்றும் சீனாவுடனான ஒப்பந்தங்கள் குறித்து விசேட குழுவொன்றின் மூலம் ஆராயப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.