இலங்கையில் வழங்கப்படும் “ஆக்ஸ்போர்ட் அஸ்ட்ரா ஜெனிகா” தடுப்பூசியினால் நாட்டில் பரவிவரும் புதிய கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியுமா? என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார்.
ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
கொவிட் தடுப்பூசி வழங்குவது தொடர்பாக அரசாங்கத்திற்கு எந்த திட்டமும் இல்லை என்று கூறிய அவர் நாட்டிற்கு பொருத்தமான தடுப்பூசியை மக்களுக்கு பெற்றுக்கொடுக்க தற்போதைய அரசாங்கத்தால் முடியவில்லை எனவும் தெரிவித்தார்.
அரசாங்கம் ஒரு கேளிக்கையான தொலைக்காட்சி நாடகத்தை நடத்துகிறது, இதன் இயக்குநர் பந்துல குணவர்தன என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் குறிப்பிட்டார்.