
இலங்கை பாராளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம் லொக்குபண்டார காலமானார்.
கொவிட் தொற்றுக்கு உள்ளான நிலையில் கொழும்பு ஐடிஎச் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த அவர் தனது 81 ஆவது வயதில் இன்று காலமானதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
2004 ஆம் ஆண்டு முதல் 2010 ஆண்டு வரையில் சபாநாயகராக பதவி வகித்த லொக்கு பண்டார, 2010 முதல் 2015 ஆம் ஆண்டு வரையில் சபரகமுவ மாகாணத்தின் ஆளுநராக பதவி வகித்தார்.
கடந்த வாரத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளான அவர் ஐடிஎச் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மாலை காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.