அடுத்துவரும் சில மாதங்கள் இலங்கைக்கு பொருளாதார ரீதியில் நெருக்கடியான காலமாக இருக்கும் என நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில்முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள பின்னடைவிலிருந்து நாடு இன்னமும் மீண்டு வந்துகொண்டிருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் 400000 புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்க வேண்டியுள்ளதாக தெரிவித்துள்ள அவர் அதற்காகத் தாம் செயற்படுவதாகவும் கூறியுள்ளார்.
இதன் காரணமாகவே தாம் புதிய முதலீட்டாளர்களைக் கொண்டுவருவதாகவும் அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.