November 21, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘சிங்கள பௌத்தம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக ஏனைய மத உரிமைகளை பறிக்கக்கூடாது’

(FilePhoto/FaceBook)

சிங்கள பௌத்தம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக ஏனைய மத உரிமைகளை பறிக்கக்கூடாது, அழிக்கக்கூடாது என்று அபயாராம விஹாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக கருத்து வெளியிட்ட ஆனந்ததேரர்  பௌத்த சிங்கள உரிமைகள் குறித்து நாம் பேசிக்கொண்டு வருகின்றோம். கடந்த காலங்களில் சிங்கள பௌத்த உரிமைகள் அழிக்கப்பட்டதை நாம் அவதானித்துள்ளோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் அமைதியான நாட்டினை கட்டியெழுப்புவதே எமது நோக்கமாக இருக்க வேண்டும். மாறாக குழப்பங்களை ஏற்படுத்தும் அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்கக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அரசாங்கம் உருவாக்கப்பட்டதன் நோக்கத்தில் இருந்து இன்று அரசாங்கம் விலகிச்செல்லும் நிலைமை உருவாகியுள்ளது.

அரசாங்கத்தை உருவாக்க முன்நின்ற அனைவரும் ஓரங்கட்டப்பட்டு தற்போது புதியவர்கள் இன்று அரசாங்கத்தை கையில் வைத்துள்ளனர் எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் இவர்களின் நெருக்கடிக்குள் ஜனாதிபதி சிக்கிக்கொண்டுள்ளதுடன் பிரதமரும் அண்மைக்காலமாக பலவீனமான நிலைமையில் உள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார்

இதேவேளை நான் பல்வேறு சந்தர்ப்பங்களில் பிரதமருடன் பேசிய வேளையில் கூட அவர் விரக்தியில் உள்ளதை நான் அறிந்துகொண்டேன்.

எனவே அரசாங்கத்தில் உள்ள பலவீனங்களை உடனடியாக சரி செய்ய வேண்டும். அதுவே ஆட்சியை தக்க வைக்க சாதகமாக அமையும் எனவும் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.