June 13, 2025 13:06:26

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் தேங்காய்க்கு விலை நிர்ணயம் – 60 முதல் 70 ரூபா

தேங்காய் விலை அதிகரிப்பை கட்டுப்படுத்தும் வகையில் நுகர்வோர் விவகார அதிகார சபையினால் அதற்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து விசேட வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு அமைய 13 அங்குலத்திற்கு அதிகமான தேங்காய் 70 ரூபாய்க்கும், 12 – 13 அங்குலம் வரையான தேங்காய் 65 ரூபாய்க்கும், 12 அங்குலத்திற்கு குறைவான தேங்காய் 60 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.