May 25, 2025 14:07:17

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘மண்ணையும் பெண்ணையும் காப்போம்’: ஹட்டனில் விழிப்புணர்வு நிகழ்வு

‘மண்ணையும் பெண்ணையும் காப்போம்’ எனும் தொனிப்பொருளில் ஹட்டன் மல்லிகைப்பூ சந்தியில் மலையகப்பெண்களால் விழிப்புணர்வு நிகழ்வொன்று இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் 18 தோட்டங்களைச் சேர்ந்த சுமார் 100 இற்கு மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது ‘நூறு கோடி மக்களின் எழுச்சி, இயற்கை உணவுகள் உண்போம், ஆரோக்கியமான வாழ்வை வாழ்வோம், இயற்கையை காப்போம்’ போன்ற வசனங்களை எழுதிய பதாதைகளை காட்சிப்படுத்தியவாறு இந்த விழிப்புணர்வு நிகழ்வை முன்னெடுத்தனர்.

இயற்கையற்ற உணவு பயன்பாட்டின் காரணமாக உலகில் வாழும் நூறு கோடி மக்கள் பல்வேறு தொற்று நோய்களுக்குள்ளாகி வருவதுடன் இயற்கை அழிவின் காரணமாக பல்வேறு பிரச்சனைகளுக்கு முகங்கொடுத்து வருவதாக நிகழ்வில் கலந்துகொண்ட பெண்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதேவேளை பெண்கள் பச்சை நிற ஆடை அணிந்து மிகவும் அமைதியான முறையில் சுகாதார விதிமுறைகளுடன் இந்த விழிப்புணர்வு நிகழ்வை முன்னெடுத்திருந்தமை  குறிப்பிடத்தக்கது.