May 14, 2025 15:36:31

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ்ப்பாணத்தில் கால் மேசைப் பந்தாட்டம் அறிமுகம்

இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சினால் 72 ஆவது விளையாட்டாக அறிமுகப்படுத்தப்பட்ட கால் மேசைப் பந்தாட்டம் (Teq Ball) முதல் தடவையாக வட மாகாணத்தின் யாழ்ப்பாணத்தில் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதன் ஆரம்ப நிகழ்வு இன்று வல்வெட்டித்துறை வல்வை விளையாட்டு அரங்கில் நடைபெற்துள்ளது.

இந்த விளையாட்டுக்கான யாழ்ப்பாணம் மாவட்ட இணைப்பாளராக சிவா ஜீவிந்தன், இலங்கை கால் மேசைப் பந்தாட்ட சம்மேளனத்தால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிகழ்வுக்கு இலங்கை டெக் சங்கம் சார்பாக இலங்கைக்கான டெக் பந்தாட்ட அபிவிருத்தி முகாமையாளர் சிவராஜா கோபிநாத், சம்மேளனத்தின் உயர் அதிகாரிகள் ரஞ்சித் மற்றும் மருத்துவர் கணேசநாதன் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.

இந்நிகழ்வில் யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனும் பங்கேற்றுள்ளார்.

இதன்போது, வடமாகாண விளையாட்டு கழகங்களுக்கு 15 இலட்சம் ரூபாய் பெறுமதியான டெக் பந்தாட்ட உபகரணங்களைக் கையளித்து, யாழ். மாவட்டத்தில் டெக் பாந்தாட்டம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கபட்டுள்ளது.